×

பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதிகளில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல்

பேரையூர், நவ. 8: பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதிகளில் படைப்புழுத் தாக்குதலாலும், காட்டுப்பன்றிகள் பயிர்களை அழிப்பதாலும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேடபட்டி ஒன்றியத்தில் சேடபட்டி, சின்னக்கட்டளை, டி.ராமநாதபுரம், சங்கரலிங்காபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சாப்டூர், மங்கல்ரேவு, குப்பல்நத்தம், எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், பெருங்காமநல்லூர், பூசலப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்காச்சோளப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதேபோல் பேரையூர் பகுதியில் பேரையூர் சின்னப்பூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, மத்தக்கரை, விஜயநாகையாபுரம், சாலிச்சந்தை, சந்தையூர் உள்ளிட்ட பகுதிகளிலிலும், டி.கல்லுப்பட்டி பகுதியில் நல்லமரம், கொட்டாணிபட்டி, வையூர், காடனேரி, அம்மாபட்டி, சத்திரப்பட்டி, வன்னிவேலம்ம்பட்டி, சோலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்காச்சோளப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த மக்காச்சோளப்பயிர்களை சென்ற முறை பயிரிட்ட விவசாயிகள் படைப் புழு தாக்குதலால் விவசாயிகள் பெரும் அளவில் நஷ்டமடைந்தனர். இந்த முறையும் மக்காச்சோளப் பயிர்களை படைப்புழு அதிகமாக தாக்கி பெருமளவில் சேதப்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து மக்காச்சோளப்பயிர்களை ஒடித்து அழித்துவிட்டு செல்கின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சலுப்பபட்டியைச் சேர்ந்த பெரியபெத்தனன் கூறும்போது, ‘மக்காச்சோளம் பயிட்டு நாங்கள் பெரிய அளவில் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகிறோம். இதில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் படைப்புழுத்தாக்குதலை பார்வையிட அதிகாரிகளை அழைத்து வந்து அதனை போட்டோ எடுத்து, உயர் அதிகாரிகளை திருப்திபடுத்த முயலுகின்றனரே தவிர விவசாயிகள் நஷ்டமடையாமல் இருக்க எந்தவொரு ஆலோசனைகளும் இதுவரை வழங்கவில்லை என்று கூறினார். இதேபோல் முனியாண்டி கூறும்போது, ‘சென்றமுறை மக்காச்சோள இழப்பீட்டுத்தொகை வழங்குகிறோம் என்று 8 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு 4 ஏக்கர் கணக்கு காண்பித்து, உழுத கூலி கூட கிடைக்க வில்லை, அரசு வழங்கிய இழப்பீட்டுத்தொகை. இந்த முறை அதைவிட மோசமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம்’ என்றார். இதேபோல் மங்கல்ரேவு சீத்தாராமன் கூறும்போது, ‘7 ஏக்கரில் மக்காச்சோளம் பயிட்டுள்ளேம், அதில் ஒரு ஏக்கர் அளவிலான மக்காச்சோளப்பயிர்களை காட்டுப்பன்றி ஒடித்து நாசம் செய்துவிட்டது. எத்தனையோ பாதுகாப்பாக தோட்டத்தில் வேலி போட்டு காத்தாலும், அதனை உடைத்தெரிந்து விட்டு கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டுச்செல்கிறது. அது மட்டுமல்லாமல் படைப்புழுத்தாக்குதால் பயிர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அரசு வழங்கிய இழப்பீட்டுத்தொகையே மிகவும் குறைவானது, இந்த முறை அதுவும் கிடையாது என்கின்றனர் என்று கூறினார். இதேபோல் சங்கரன் கூறும்போது, ‘நான் 8 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன் படைப்புழுத்தாக்குதல், காட்டுப்பன்றித்தாக்குதல், ஆகிவைகளால் அதிகமான நஷ்டமடைந்ததால் பகுதி விவசாயிகள் பயிர்களை மாற்றி பயிரிட்டும், சிலர் விவசாயம் செய்யாமல் தரிசு நிலங்களாக போட்டு விட்டனர். அரசு சார்பாக காப்பீட்டுத்தொகை கட்டுவதற்கும், மானியம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்வதற்கும் மட்டுமே வேளாண்மைத்துறையினர் அதிகம் செயல்படுகின்றனர். மானியமாக கிடைக்கிற பொருட்களை மற்றும் விவசாய உபகரணங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினர்களுக்கும், புரோக்கர்களாக செயல்படுவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது எனவே அதிகாரிகள் உண்மை விவசாயிகளை கண்டறிந்து உரிய இழப்பீட்டுத்தொகை கிடைக்கவும், மானியப்பொருட்கள் வழங்கவும் அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கூறினார்.

Tags : Pesticide attack ,areas ,Peraiyur ,
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது