மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 7வது நாளாக காத்திருப்பு போராட்டம்

மதுரை, நவ.8: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 7வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அமைதி ஊர்வலம் நடத்தும் இவர்கள் வரும் நாட்களில் மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் வேண்டும். 2008ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்குவதோடு, 2008க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, கேங்மேன் பதவியில், தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.1ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று 7வது நாளாக புதூரில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், செயலாளர் மணிவாசகம், மண்டல செயலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மணிவாசகம் கூறும்போது, ‘‘எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும். மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். நவ.8 (இன்று) அமைதி ஊர்வலம் நடத்துகிறோம். வரும் நாட்களில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories: