×

ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில், நவ. 8: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் சோதனை நடத்தி ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை தனிதாசில்தார் சதானத்தத்திற்கு தகவல் வந்தது. அவரது தலைமையில் துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் அதிகாரி ரெதன் ராஜ்குமார், ஓட்டுனர் டேவிட் ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு சென்றனர்.  அப்போது பிளாட்பாரத்தில் 20க்கும் மேற்பட்ட சிறிய மூடைகளில் ரேஷன் அரிசி கட்டி வைத்திருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். அதனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். அந்த அரிசியை யாரும் உரிமைகொண்டாடி வரவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை பின்னர் கோணம் நுகர்பொருள்வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.

Tags : railway station ,
× RELATED கேரளாவுக்கு கடத்த முயன்ற 3,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்