×

ஈத்தாமொழியில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

ஈத்தாமொழி, நவ.8: ஈத்தாமொழி  பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டருக்கு கடந்த 4ம் தேதி  மணிக்கட்டிபொட்டல் ராமபுரம் பகுதியை சேர்ந்த நீலநாராயணன் (33) என்பவர் போன்  செய்தார். அப்போது அவர் பண்ணையாருக்கு சிலை வைக்க வேண்டும். அதற்கு  நன்கொடையாக ரூ.1 லட்சம் தர  வேண்டும். சுரேஷ் என்ற அகிலன் என்பவர் வருவார்  அவரிடம் பணத்தை கொடுக்க வேண்டும். பணம் தரவில்லை என்றால் பல்வேறு விளைவுகளை  சந்திக்க வேண்டும் என மிட்டியுள்ளார்.  அவர் கூறியபடி சுரேஷ் என்ற  அகிலன்  என்பவர் டாக்டரை சந்தித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்  அவரிடம் ₹1 லட்சத்தை  கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து ஈத்தாமொழி  போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி  போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று நீலநாராயணன், சுரேஷ் என்ற அகிலன்  ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : doctor ,
× RELATED வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டாக்டர் உள்பட 2 பேர் கைது