×

ஆசாரிபள்ளத்தில் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2ம் வகுப்பு மாணவன்

நாகர்கோவில், நவ. 8: குமரி மாவட்டத்தில் ஆட்டோவில் பெரியவர்கள் என்றால் 3 பேரும், சிறியவர்கள் என்றால் 5 பேரையும் ஏற்றி செல்லவேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆட்டோவில் பள்ளி மாணவ,மாணவிகளை அதிக அளவு ஏற்றி செல்கின்றனர். இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுபோல் ஆசாரிபள்ளத்திலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மேலஆசாரிபள்ளம் உடையாள்விளை தெருவை சேர்ந்தவர் எட்வின் ஆன்டனி. இவரது மகன் விஜோ லூயிஸ்(7). ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு விஜோலூயிஸ் மதுரை மீனாட்சிதோப்பை சேர்ந்த ஆதி என்பவரது ஆட்டோவில் செல்வது வழக்கம். சம்பவத்தன்று மாணவர் விஜோலூயிசை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குசென்றுக்கொண்டு இருந்தார். கீழ ஆசாரிபள்ளம் ஆற்றுப்பாலம் திருப்பத்தில் ஆட்டோவை வேகமாக திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவில் இருந்து விஜோ லூயிஸ் வெளியே தூக்கிவீசப்பட்டான். இதில் படுகாயம் அடைந்த மாணவர் விஜோலூயிஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : student ,Asari Palli ,
× RELATED நண்பர்களுடன் மீன் பிடித்தபோது கால்வாயில் தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி