×

9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

மார்த்தாண்டம், நவ. 8: கீரிப்பாறை அருகே உள்ள வெள்ளாந்திமலை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சாகர் (18, பெயர் மாற்றம்) என்ற வாலிபரை மாணவி காதலித்து வந்துள்ளார். இதனிடையே மாணவி அந்த பகுதியில் நடந்த தோழியின் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மாணவி வீட்டுக்கு செல்லாமல் சாகர் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது மாணவியை சாகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
  இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சாகரை கைது செய்தார்.


Tags : student ,
× RELATED மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி மாணவர் கைது