×

ஆழ்கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் மீட்பு

நாகர்கோவில், நவ.8: படகு பழுது காரணமாக முட்டம் அருகே ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்களே மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சார்ந்த ஷிபு என்பவருக்கு சொந்தமான ‘நிர்மல் மாதா’ என்ற விசைப்படகில் குமரி மாவட்டம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் சென்ற விசைப்படகு நேற்று மாலையில் திடீரென பழுதடைந்துள்ளது. மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். இது தொடர்பாக கடலோர காவல்படை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே வேளையில் ‘உயிருக்கு ஆபத்து இருந்தால் மட்டுமே நாங்கள் சென்று மீட்க முடியும், படகுக்கு ஆபத்து என்றால் மீனவர்கள் தாமே தங்கள் கரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் முட்டம் ஆழ்கடல் பகுதியில் 8 நாட்டிக்கல் தொலைவில் தத்தளித்த ‘நிர்மல் மாதா’ விசைப்படகையும் அதிலுள்ள தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 10 மீனவர்களையும் மீட்பதற்காக விசைப்படகில் இருந்த மீனவர் ஒருவர் வேறு படகில் நேற்று காலையில் கரைக்கு வந்து சேர்ந்தார்.அவர் பிற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து பூத்துறையை சேர்ந்த ஷிபு என்பவருக்கு சொந்தமான ஜீசஸ் ரிடிமர் என்ற விசைப்படகு  நேற்று காலை மீட்பு நடவடிக்கைக்காக புறப்பட்டு சென்றது. இந்த படகு மூலம் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அவர்களது விசைப்படகை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

Tags : fishermen ,sea ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் இன்றுடன்...