×

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

நாகர்கோவில், நவ. 8:கார்மல் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் நினைவு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி இன்று(8ம் தேதி) காலை 9.30 மணிக்கு கார்மல் மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது. போட்டியில் கார்மல் பள்ளி, எஸ்.எல்.பி பள்ளி, எஸ்.எம்.ஆர்.வி பள்ளி, பயஸ் தூத்தூர், மண்டைக்காடு ரபேல் உள்பட 12 அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டியை கார்மல் பள்ளி தாளாளர் சேவியர்ராஜ் தொடங்கி வைக்கிறார்.கார்மல் பள்ளி முன்னாள் மாணவர் இயக்க இயக்குநர் மரியசிங்கராயர், டாக்டர் விஜயன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 2 நாட்கள் நடக்கும் போட்டியில் 9ம் தேதி மாலை பரிசு வழங்கும் விழா நடக்கிறது. பரிசு வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வில்சன் தலைமை வகிக்கிறார். கார்மல் பள்ளி பொருளாளர் குமார் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெகன் ஜாஸ்கட், கார்மல் பள்ளி முன்னாள் மாணவர் இயக்க தலைவர் டங்ஸ்டன் ரமேஷ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். போட்டி ஏற்பாடுகளை பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாண் உபால்ட், அமல்ராஜ், ஆசிரியர் செயலர் அருள்ராஜ், ஜெரோம், உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் மற்றும் ஜெகன், சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Tags : football match ,Nagercoil ,Carmel School ,
× RELATED தென்கொரியாவில் மீண்டும் கால்பந்து போட்டி தொடக்கம்