×

மீன்பிடி தொழிலாளி மாயம்

கன்னியாகுமரி, நவ. 8: கன்னியாகுமரி பில்லர்நகரை சேர்ந்தவர் ரீனா(36). இவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் ரஞ்சித்(38) கட்டுமரம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு செல்வதாக கூறி  பைக்கில் சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறியிருந்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags :
× RELATED தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு...