×

புதிய ஜிஎஸ்டி படிவம் பற்றி வணிகர்களுக்கு பயிற்சி

திருச்சி, நவ.8: திருச்சியில் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையம் சார்பில் வணிகம் மற்றும் வணிகர்கள், ஜிஎஸ்டி பதிவு பெற்றவர்களுக்கு புதிய ஜிஎஸ்டி படிவம் மற்றும் சப்கா விஷ்வாஸ் திட்டம் குறித்த பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் கூடுதல் ஆணையர் ஆரோக்கியராஜ், துணை ஆணையர் கலையழகன் ஆகியோர் தலைமையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள மத்திய கலால் மற்றும் சேவை வரிச் சட்டங்களின் கீழ் உள்ள வழக்குகளை தாமாகவே முன்வந்து இத்திட்டத்தின் கீழ் முடித்துக்கொள்ள வாய்ப்பளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.Tags :
× RELATED நீட் பயிற்சிக்கு இலவச செயலி