முசிறி ஊராட்சி அலுவலகம் முன் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முசிறி, நவ.8: முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், பழனிவேல், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு 7வது ஊதியக்குழு அரசாணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை ரூ.50 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய மாதம் ரூ.350 வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி திட்ட ஆணையர் ஜோசப் கென்னடியிடம் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: