துறையூர் அருகே விடுதி வார்டனை கொன்ற கல்லூரி மாணவர் கைது

துறையூர், நவ.8: துறையூர் அருகே தனியார் கல்லூரியில் விடுதி வார்டனாக 10 வருடத்திற்கு மேல் பணிபுரிந்து வந்தவர் வெங்கட்ராமன்(48). இவர் கல்லூரியில் படித்து வந்த அப்துல்ஹக்கீம் என்ற மாணவன் ஒழுங்கு நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரது பெற்றோருக்கு புகார் செய்தார். இதுபற்றி பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவர் அப்துல்ஹக்கீம் நேற்று முன்தினம் விடுதியில் தங்கியிருந்த வார்டன் வெங்கட்ராமனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் ஜமுனாபுரம் போலீசார் அப்துல்ஹக்கீமிடம் விசாரணை செய்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து மாணவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: