×

மிலாடி நபி: 10ம் தேதி டாஸ்மாக் கடை மூடல்

திருச்சி, நவம்.8: திருச்சி மாவட்டத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு வரும் 10ம்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்கள், எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3யு, எப்.எல்.3யுயு மற்றும் எப்.எல்.11 முதலான ஓட்டல் பார்களிலும் மதுபான விற்பனையின்றி மூடப்பட்டிருக்கும். இத்தகவலை கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED உடுமலையை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை