×

நகைக்கடை கொள்ளையர் இருவர் குண்டாஸில் கைது

திருச்சி, நவ.8: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2ம் தேதி துளையிட்டு பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக மேலாளர் நாகப்பன் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைக்க தகவலின் பேரில் திருவாரூர், மடப்புரம், முக்திவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(34), சீராத்தெரு கனகவள்ளி(57) ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த இருவரும் தொடர் குற்றம் செய்யும் எண்ணம் உடையவர்கள் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதற்கான ஆணை நேற்று மாலை திருச்சி மத்திய சிறையில் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரும் குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.


Tags : robbers ,
× RELATED விழுப்புரம் அருகே சிறுமியை எரித்து...