×

மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் மாயம்

திருச்சி, நவ. 8: திருச்சி கோட்டை சிந்தாமணி ஓடத்துறையை சேர்ந்தவர் ரெங்கராஜ்(40), ஆட்ேடா டிரைவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரெங்கராஜ், ஆட்டோவை எடுத்துக்கொண்டு ஓடத்துறை சர்வீஸ் சாலைக்கு வந்தார். அங்கு ஆட்டோவை நிறுத்தி வைத்து அதில் தான் அணிந்திருந்த செருப்பையும் வைத்துவிட்டு மாயமானார்.

வீடு திரும்பாத ரெங்கராஜை அவரது குடும்பத்தினர் தேடிய போது, ஆட்டோ மற்றும் அவர் அணிந்திருந்த செருப்பு மட்டும் இருந்தது தெரியவந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து மகள் தனபிரியா கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் காவிரியாற்றில் குதித்தாரா அல்லது வேறு எங்கேனும் சென்றாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED குடித்துவிட்டு தகராறு செய்வதை...