×

வலங்கைமான் அடுத்த தொழுவூரில் கார்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்

வலங்கைமான், நவ.8: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கீழகாட்டூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகையன் மகன் அன்பரசன்(32). இவர் குடும்பத்தோடு நேற்று மதியம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் உள்ள குருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வீட்டிற்கு காரில் மன்னார்குடி- கும்பகோணம் சாலையில் தொழுவூர் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக கும்பகோணம் பகுதியிலிருந்து எதிரே வந்த கார் திடீரென மோதியது. இச்சம்பவத்தில் திருவிடைமருதூர் கீழகாட்டூர் மேலத்தெருவை சேர்ந்த கார் டிரைவரும் முருகையன் மகனுமான அன்பரசன்(32). கர்பிணியான அன்பரசனின் மனைவி அருணா(19), அன்பரசனின் தாயார் ரெங்கநாயகி(58), மற்றும் அன்பரசனின் சகோதரர் சிவக்குமாரின் மனைவி லெட்சுமி(25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களுக்கு வலங்கைமான் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குடந்தை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.அவளிவநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கட்டராமன் நாச்சியார் கோயில் கிராமத்தில் உள்ள வயலுக்கு சென்று விட்டு அவளிவநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பும்போது மோதியதாக கூறப்படுகிறது. வலங்கைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : laborer ,Valangaiman ,
× RELATED சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து...