×

திருவாரூரில் அரசு மருத்துவமனை சீர்கேடு கண்டித்து தமமுக ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.8: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், அங்கு பிரசவ பகுதிக்கு என தனியாக கட்டிடம் கட்டித்தர கோரியும் நேற்று அரசு மருத்துவமனை முன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் பாவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆரோக்கிய செல்வம், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...