×

வலங்கைமான் அடுத்த தொழுவூரில் ஊராட்சி குளத்தில் குப்பை கொட்டுவதால் தண்ணீர் மாசு


வலங்கைமான், நவ.8: வலங்கைமான் அடுத்த தொழுவூரில் ஊராட்சிக்கு சொந்தமான குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசு அடைவதாக பொதுமக்கள் குற்றசாட்டியுள்ளனர்.வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திட்கு உட்பட்ட தொழுவூர் ஊராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரே ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை துறையின் மூலம் தூர்வாரப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கென படித்துறைகள் அமைக்கப்பட்டது.
மேலும் கும்பகோணம்-மன்னார்குடி சாலை ஓரம் இக்குளம் இருப்பதால் குளத்தினை சுற்றி தடுப்புப்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் எதிரே பாலிடெக்னிக் கல்லூரி இருப்பதால் குளத்தினை சுற்றி பூங்காங்கள் அமைக்க ஊரக வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு குளம் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது.இந்நிலையில் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரப்பாததை அடுத்து குளத்தின் வடகிழக்கு பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதனால் தண்ணீர் மாசடைகின்றது.இதனால் பொதுமக்கள் தண்ணீரினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிராம ஊராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனே அப்புறப்படுத்தவும், மேலும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நீர் மாசுபடுவதை தவிற்க முன் வரவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : panchayat pool ,
× RELATED தொழிற்சாலை கழிவு நீர் மீண்டும்...