×

யூரியா உரம் தட்டுப்பாட்டால் அதிக விலைக்கு விற்க வாய்ப்பு

திருத்துறைப்பூண்டி, நவ.8:
யூரியா உரம் தட்டுப்பாட்டால் அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சுமார் இரண்டரைலட்சம் ஏக்கரில் ஒரு போகம் நெல் சாகுபடி டெல்டா பகுதியில் நடப்பு பசலி செய்து வருகின்றனர். தற்பொழுது 40 நாள் உள்ள பயிருக்கு யூரியா உரம் ஒரே நேரத்தில் தெளிக்க வேண்டியதாக உள்ளது. இதனால் யூரியா தட்டுப்பாடு டெல்டா பகுதியில் நிலவுகிறது. அரசு குடோனில் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பே இல்லை. தனியார் உர விற்பனையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்கும் சூழ்நிலையில் உள்ளது. திருவாரூர் டெல்டாவிற்கு 20 ஆயிரம் டன் யூரியா தேவையாக உள்ளதாக விவசாய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் 2000 டன் மட்டுமே விவசாய துறையால் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பிக் தனியார் கம்பெனிகளிடமிருந்து யூரியாவை வாங்குவதை நிறுத்திவிட்டது இதற்கு காரணமாகும். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் யூரியாவானது தரமானதாக இருப்பதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். ஆதலால் உடனே தட்டுப்பாட்டை நீக்கி தமிழ்நாட்டில் உள்ள உரஉற்பத்தியாளர்களிடமிருந்து அதிகளவில் யூரியா போன்ற உரங்கள் வாங்கி விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தரமான யூரியாவை கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் மையம் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags :
× RELATED தமிழகத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு...