×

அலிவலம் ஊராட்சி பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

திருவாரூர், நவ.8: திருவாரூர் அருகே அலிவலம் ஊராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா வழங்கினார்.திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வேண்டுகோள்படி மாவட்டம் முழுவதும் திமுகவினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் அருகே அலிவலம் ஊராட்சியில் இருந்து வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று ஒன்றிய திமுக சார்பில் நிலவேம்பு குடிநீரை ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா வழங்கினார். இதில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...