×

மதுக்கடைகளுக்கு 10ம் தேதி விடுமுறை

திருவாரூர், நவ.8: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாளை மறுதினம் (10ம் தேதி) மிலாடி நபி தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சில்லறை அரசு மதுபான கடைகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தின்பண்ட கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் எப்.எல் 2 மற்றும் எப்.எல் 3 உரிமம் பெற்ற மதுக்கூடங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்களில் மதுபானங்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.Tags : Holidays ,bartenders ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்