×

மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி, நவ. 8:
மன்னார்குடி வேளா ண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பேரிடர் கால பயன் பாட்டிற்காக உள்ள மரம் அறுக்கும் இயந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு நேற்று நேரில் சென்ற மாவட்ட கலெக்டர் ஆனந்த் அங்கு பேரிடர் காலங்களில் பயன்பாட்டிற்காக வைக்கப் பட்டுள்ள ரூ 50 லட்சம் மதிப்பிலான அதிகத்திறன் கொண்ட 100 மரம் அறுக்கும் இயந்திரங் களையும் பார்வையிட்டு அந்த இயந்திரங்கள் தொடர்ந்து முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை செயற்பொறியாளர் ராமநாதனிடம் கேட்டறிந்தார்.பின்னர் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் அந்த இயந்திரங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, தாசில்தார் கார்த்திக், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Collector Inspection ,Mannargudi Agricultural Engineering Department Office ,
× RELATED பெரும்பேடு அணைக்கட்டு பகுதியை கலெக்டர் ஆய்வு