×

அமைதியை கடைபிடிக்க முஸ்லிம்களுக்கு அறிவுரை

முத்துப்பேட்டை, நவ.8: முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் சார்பில் அனைத்து பள்ளி வாசல்கள், அனைத்து பள்ளிவாசல் கீழ் உள்ள அனைத்து ஜஅமாத் நிர்வாகிகளையும் அழைத்து கலந்துரையாடல் கூட்டம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேசுகையில், விரைவில் அயோத்தி தீர்ப்பு வர உள்ளது, இதில் தீர்ப்பு எதுவானாலும் தாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அமைதிக்காக வேண்டும், இதன் மூலம் சட்ட ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும், காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார். இதனை வந்திருந்த அனைத்து பள்ளி வாசல் நிர்வகிகள் மற்றும் ஜாமாத் பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொண்டு தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.


Tags : Muslims ,
× RELATED தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை...