×

பரட்டை கிராமத்தில் அடிப்படை வசதியை விரைந்து செய்து கொடுக்க வேண்டும்

கும்பகோணம், நவ. 8: கும்பகோணம் தாசில்தாரிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கும்பகோணம் ஒன்றியக்குழு தலைவர் நாகமுத்து மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் வாளபுரம் ஊராட்சி மேலபரட்டையில் நீலத்தநல்லூர் மெயின் ரோடு அருகில் குடியிருந்த 10 குடும்பங்களை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காலி செய்து சாலைக்கு மேற்கே அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அதிகாரியால் குடி அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை மேற்கண்ட குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கவில்லை. இதனால் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்படும் தொகுப்பு வீடுகள் கட்ட முடியவில்லை. 8 ஆண்டுகளாகியும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக குடிமனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.Tags : Barta village ,facilities ,
× RELATED போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த ஆன்லைன் வசதி: இன்று தொடக்கம்