ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், நவ. 8: திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு செய்த மர்மநபர்களை கைது செய்யகோரி கும்பகோணம் காந்தி பூங்கா முன் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்பகோணம் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: