×

அர்ஜூன் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யகோரி ஆர்ப்பாட்டம்


பேராவூரணி, நவ. 8: அர்ஜூன் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யகோரிபேராவூரணி அண்ணா சிலை அருகில் திருக்குறள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருக்குறள் பேரவை தலைவர் பாவலர் தங்கவேலனார் தலைமை வகித்தார். புலவர் போசு, கல்வியாளர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும்.பொது இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மதவாத அடையாளம் பூச தடை செய்ய வேண்டும். தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி உடுத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பேராவூரணி திருக்குறள் பேரவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, மதிமுக, திராவிடர் விடுதலை கழகம், தமிழக மக்கள் புரட்சி கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Protests ,arrest ,Arjun Sampath ,
× RELATED இலவச மின்சாரத்தை ரத்து செய்யும்...