துளிர் வினாடி-வினா போட்டி

இலுப்பூர், நவ.8: அன்னவாசலில் தமிழ்நாடுஅறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் விநாடி-வினா போட்டி நடைபெற்றது.அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். அன்னவாசல் வட்டார வளமேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய தொடர்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். போட்டியில் அன்னவாசல் வட்டாரத்தில் இருந்து 22 பள்ளிகள் கலந்து கொண்டன. தொடக்கநிலை பிரிவில் வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மாணவர்களும், நடுநிலைப்பிரிவில் பூங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களும், உயர்நிலைப் பிரிவில் வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் அன்னவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் முதல் இடம் பிடித்தனர். வட்டார அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் நாளை 9ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். நடுவர்களாக ஆசிரியர்கள் அம்புரோஸ், அருந்ததிகலைவாணி, செல்வம், சின்னையா ஆகியோர் செயல்பட்டனர்.


Tags : Droplet Quiz Competition ,
× RELATED வாகன ஓட்டிகள் அவதி மதுபானம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல்