கந்தர்வகோட்டையில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டியதால் பரபரப்பு

கந்தர்வகோட்டை, நவ.8: கந்தர்வகோட்டையில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையில் சேறும், சகதியுமாக உள்ளது. இதில் நாற்றை நட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் ஊராட்சி சார்பாக மண் அடிக்கப்பட்டது. மேலும் பெரும் மழை பெய்த காரணத்தினால் பல இடங்களில் சேறும் சகதியுமாக மாறின. புழைய பேருந்து நிலையத்தில் பஸ்களை இயக்க முடியாத நிலைமை இருந்தது. உடனடியாக கந்தர்வகோட்டை ஊராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் மற்றும் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு பொக்லேன் இயந்திரம் மூலம் சேறும் சகதியுமாக இருந்த மண் அகற்றும் பணி நடந்தது.இந்நிலையில் பழைய ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் செல்லும் சாலையில் சாலையோரத்தில் சிறிய அளவில் சேறும் சகதியும் இருந்துள்ளது. இதில் யாரோ நாற்றை சிலவற்றை நட்டுவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : road ,
× RELATED பயறு வகைகளில் விதைப்பண்ணை அமைத்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம்