×

விராலிமலை அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட ராணிமங்கம்மாள் காலத்து கட்டிடம் திறப்பு விழா

விராலிமலை, நவ.8: விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ராணிமங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் புதுப்பித்து திறக்கப்பட்டது.விராலிமலையில் விராலிமலை- திருச்சி சாலையில் ராணிமங்கம்மாள் மதுரையில் இருந்து திருச்சிக்கு செல்லும்போது விராலிமலையில் ஓய்வுஎடுத்து செல்லதற்காக அந்தகால கட்டத்தில் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் தான் முதன் முதலில் பள்ளி துவக்கப்பட்டது. காலப்போக்கில் வகுப்பறைகள் கூடுதலாக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதனால் ராணிமங்கம்மாள் கட்டிடம் பயன்பாட்டிற்கு இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து சமூகஆர்வலர்கள் முயற்சியின்பேரில் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனி மராமத்து செய்து புதுப்பித்து கொடுத்தது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ராணிமங்கம்மாள் கட்டிடம் திறப்புவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் கட்டிடத்தை புதுப்பித்து தனியார் நிறுவன துணைத்தலைவர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைதொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக உதவிதலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பூங்குழலி நன்றி கூறினார்.


Tags : Opening Ceremony ,building ,Viralimalai Government School ,
× RELATED பிரதிஷ்டை தின பூஜை சபரிமலையில் நடை திறப்பு