×

ரெகுநாதபுரத்தில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்

கறம்பக்குடி, நவ.8: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் ரெகுநாதபுரம் கிராமத்தில் அரசு பொது விநியோக கீழ் ரேசன் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. மாவட்ட வளங்கள் அலுவலர் ஜாபர்அலி தலைமையில் நடைபெறும் இந்த ரேசன் குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோக திட்டத்தின்கீழ் உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை பெறுவது சம்பந்தமான விளக்கம், பெயர் மாற்றம் செய்தல், போன்ற சம்பந்தமான அனைத்து விளக்கங்களையும் கேட்டுப்பெற்று பயன் அடையலாம் என்று கறம்பக்குடி தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : ration camp ,Rekunadapuram ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம்...