×

அம்புக்கோவில் அரசு பள்ளியில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

கறம்பக்குடி, நவ.8: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகள் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் பல்வேறு பொது இடங்களில் பொது சுகாதார துறை சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கறம்பக்குடி அருகே உள்ள அம்புக் கோவில் அரசு உயர் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது சுகாதார துறை சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் 400 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் முத்துக்குமார், நவநீதகண்ணன், அகஸ்டின்ராஜன், அகஸ்டின், ஆசிரியைகள் முத்து லெட்சுமி, கார்த்திகா மற்றும் சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன் சிறப்பாக செய்து இருந்தார்.Tags : Earthquake ,government school ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் நிலநடுக்கம்