×

அரிமளம் வட்டாரத்தில் நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

திருமயம், நவ.8: அரிமளம் வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்து கல்லுகுடியிருப்பு கிராம முன்னோடி விவசாயி சுப்பிரமணியன் தோட்டத்தில் திருப்பதி தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் தலைமையில் காளிமுத்து அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் முன்னிலையில் நடைபெற்றது. தேசிய உணவு பாதுகாப்புத் இயக்க ஆலோசகர் திருப்பதி முக்கிய இடுபொருட்களான விதை, தண்ணீர், உரம், பயிர்பாதுகாப்பு, தொழில்நுட்பம், கடன், இயந்திரங்கள் திட்ட மானிய விபரங்கள் மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்து விளக்கி பேசினார்.அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் காளிமுத்து வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கோடைஉழவு, பி.எம்.கிசான், விவசாயிகள் பயிர் காப்பீடு பிரதம மந்திரியின் ஓய்வூதியத் திட்டம், விவசாயிகள் ஊக்கத்தொகை, நுண்ணீர் பாசன திட்டம், உழவன் செயலி திட்டம் குறித்து விளக்கமளித்தார். உப்பு கரைசல் மற்றும் அசோஸ்பைரில்லம், விதை நேர்த்தி முறைகளை தொழில் நுட்ப உதவியாளர் கார்த்திக் செயல்விளக்கம் செய்து காட்டினார். வேளாண் கருத்துக்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

இயக்க ஆலோசகர் விவசாயிகளுக்கு கையேடு மற்றும் இடுபொருட்கள் வழங்கினார். முன்னோடி விவசாயிகள் சுப்பிரமணியன், பெரியகருப்பன், ராமலிங்கம், சண்முகம் தங்களது அனுபவங்களை விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். சுப்பிரமணியன் வயலில் மேலுரம் இடும் முறை செயல்விளக்கம் உதவி வேளாண்மை அலுவலர் சுவேதா செய்து காட்டினார்.உதவி வேளாண்மை அலுவலர் சுவேதா வரவேற்றார். பிரிpயகுமார் வட்டார தொழில் நுட்ப மேலாளர் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை சுவேதா மற்றும் பிரியகுமார் செய்திருந்தனர்.

Tags : Arimalam ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதியில் மழையை...