×

மக்காச்சோள பயிர்களில் ஒட்டு மொத்த மருந்து தெளிப்பு

புதுக்கோட்டை, நவ.8: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டாரம் துடையூர் மற்றும் அம்மாசத்திரம் கிராமங்களில் பயிர் செய்துள்ள மக்காச் சோளம் பயிரில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒட்டு மொத்த மருந்து தெளிப்பு செய்வதை சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் நாராயணசாமி ஆய்வு செய்தார்.அன்னவாசல் வட்டாரத்தை சார்ந்த துடையூர் மற்றும் அம்மாசத்திரம் கிராமங்களில் பயிர் செய்துள்ள மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர், பழனியப்பா ஏற்பாட்டின்படி ஸ்பைனிட்டோரம் என்னும் மருந்தினை ஒரு ஏக்கருக்கு 100 மிலி வீதம் 200லி நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு ஒட்டு மொத்தமாக உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களால் மருந்து தெளிக்கப்பட்டது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் இம்மருந்து தெளிக்கும் பணியினை சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் நாராயணசாமி துவக்கிவைத்து ஆய்வு செய்தா. இந்த பணி ஆய்வின்போது தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகரன், வேளாண்மை அலுவலர்கள் முகம்மது ரபி, சபிக்கா பாத்திமா, உதவி வேளாண்மை அலுவலர் பாஸ்கர், உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜீ உடனிருந்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட மக்காச்சோள விவசாயிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக மக்காச்சோள பயிரில் படைப்புழுவை மருந்து தெளித்துக் கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றியும் பாதுகாப்பாக மருந்து தெளிப்பது பற்றியும் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.


Tags :
× RELATED பழநி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை