×

இலுப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

இலுப்பூர், நவ.8: இலுப்பூரில் நெடுஞ்சாலை துறையினர் பயணியர் மாளிகைக்கு செல்லும் வழியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.இலுப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் நெடுஞ்சாலை துறையினரின் பயணியர் மாளிகை உள்ளது. அந்த பயணியர் மாளிகைக்கு செல்லும் வழியில் இருபுறங்களிலும் தேநீர் விடுதிகள் நடத்துபவர்கள் வழியை ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் பயணியர் மாளிகைக்கு செல்லும் வழியில் இடையூறு ஏற்பட்டது. மேலும் மாலை நேரங்களில் வாகனங்கள் இந்த வழியில் நிறுத்தப்படுவதால் மேலும் இடையுறு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நெடுஞ்சாலைதுறையினர் காவல் துறையினர் உதவியுடன் பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் இலுப்பூர் பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Iluppur ,
× RELATED புதுகை எஸ்பி பேட்டி இலுப்பூர்...