×

மு.க.ஸ்டாலின் தொடர்பாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது

புதுக்கோட்டை, நவ.8: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது என்று திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாசத்திரம், நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,எமர்ஜென்சி காலம் முடிந்து 45 ஆண்டு காலம் ஆகிவிட்டது. 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அந்த பிரச்சனையை கிளப்பி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்துள்ளது அநாகரிகம். கண்டனத்துக்குரியது.அந்த காலகட்டத்தில் அமைச்சர் பாண்டியராஜன் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார்.

அமைச்சர் பாண்டியராஜன் திமுக தலைவர் குறித்து விமர்சனம் செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். ஒருவரை தரம் தாழ்ந்து பேசுவதால் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தரம் தாழ்ந்து போவது கிடையாது. ஆனால் விமர்சனம் செய்பவர்கள் தான் தாழ்ந்து போவார்கள். 99ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக அன்றைய காலகட்டத்தில் பாஜக மதவாத கட்சி என்று கூறி மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் எம்பிக்கள் வாக்களித்தனர்.ஆகையால் மதவாத கட்சியான பாஜகவோடு ஜி.கே.வாசன் சேர மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. உலகம் போற்றும் திருவள்ளுவர் எழுதிய 1330 குறளில் எந்த கடவுளையும் அவர் குறிப்பிடவில்லை. காவி கலர் தேசியக் கொடியிலும் உள்ளது. காவி பொதுவானதுதான்.ஆனால் காவி என்பது பிஜேபியின் அடையாளம் தான் என்று அவர்களுடைய கட்சியினரே தான் மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றார்.


Tags : Minister Mp ,Pandiyarajan ,MK Stalin ,
× RELATED பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் தரை...