×

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காவு வாங்க காத்திருக்கும் மெகா பள்ளம்

பெரம்பலூர், நவ.8: பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்வதற்கான இருவழிச் சாலை உள்ளது. இதன் முகப்பில் பிரமாண்ட நுழை வுவாயில் உள்ளது. இதில் கலெக்டர் அலுவலகத்திலிருந்து பிரமாண்ட நுழை வு வாயில் வரும் சாலையில் நுழைவு வாயிலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் யு-டர்ன் பகுதியில் வாக னங்கள் திருப்பித் திருப்பி பள்ளமாகக் காணப்படுகி றது. ஒருஜான் ஆழத்திற்குமேல் தார்சாலை நடுவே பள்ளம் இருப்பதால் அதில் எதிர்பா ராமல் இறங்கி ஏறும் பைக்குகள் தலைகுப்புறக் கவிழ்ந்து வாகன ஓட்டிக்கு மர ணம் ஏற்படும் அளவுக்குக் காயங்களை ஏற்படுத்துகிறது. இதன் அருகே மிகப் பெரிய நட்சத்திர ஹோட் டல், சிற்றுண்டி உணவகம், பைக் ஷோரூம்கள், எலக்ட் ரானிக் பொருட்கள் விற்ப னை மையம்போன்றவை இருப்பதால் தவறிவிழும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே சாலைநடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரை ந்து மூடி விபத்துக்களைத் தவிர்க்க சம்மந்தப்பட்ட துறையினர் துரித நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Office entrance ,Collector ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...