×

கிருபானந்த வாரியார் நினைவு நாள் விழா

ஜெயங்கொண்டம், நவ.8: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நினைவு நாள் விழா ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் வாரியார் பூங்காவில் நடைபெற்றது.செங்குந்தபுரம் ஊராட்சி தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிச்சைகுப்பன் வரவேற்றார். குமரகுரு செல்வராசு திருநீலகண்டன் புனிதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வாரியார் உருவப் படத்திற்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தி அவரது புகழ் பற்றி சிறப்புரையாற்றினர். வாரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கந்தசாமி மதியழகன் செல்வம் கலியபெருமாள் அறிவழகன் பழனியாண்டி முத்தையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : commemoration ceremony ,Kripananda Warrior ,
× RELATED திருவாரூரில் நாளை முதல்வருக்கு...