×

விவசாயிகளுக்கு தூயபால் உற்பத்தி பயிற்சி

ஜெயங்கொண்டம், நவ. 8: ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் (அட்மா) தூயபால் உற்பத்தி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி, த.வளவெட்டிக்குப்பம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சுப்பிரமணியன் தலைமை வகித்தார். த.வளவெட்டிக்குப்பம் கால்நடை மருத்துவர் இளையராஜா பங்கேற்று மாட்டு கொட்டகை அமைத்தல், பராமரித்தல், கறவை மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் பராமரிப்பு முறை குறித்து விளக்கி கூறினார். மேலும் நல்ல தரமான பால் உற்பத்தி செய்ய பசுக்களுக்கு அளிக்க வேண்டிய பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை, கோமாரிநோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து எடுத்து கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.அட்மா திட்ட செயல்பாடுகளான பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, பண்ணைப்பள்ளி, செயல்விளக்கம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி விளக்கம் அளித்தார். பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகன் மற்றும் சங்கீதபிரியா பங்கேற்றனர். பயிற்சியில் த.வளவெட்டிக்குப்பம், தத்தனூர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நீட் பயிற்சிக்கு இலவச செயலி