×

செட்டிகுளத்தில் கரடு முரடான மயானப்பாதைக்கு மாற்றுவழி கேட்டு பொதுமக்கள் போராட்டம்

பாடாலூர், நவ. 8: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மயானப்பாதை கரடு முரடாக இருந்ததால் மாற்றுவழி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் குன்னுமேடு பகுதியை சேர்ந்தவர் நடேசன் (80). இவர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல வேண்டிய மயானப்பாதை மிகவும் கரடுமுரடாக இருந்தது. அதனால் அருகில் இருந்த பட்டா நிலம் வழியாக செல்லலாம் என இருந்தனர். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்றுப்பாதை வேண்டுமென பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த தகவல் கிடைத்ததும் பெரம்பலூர் டிஎஸ்பி கென்னடி, அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா, சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கரடுமுரடாக உள்ள பாதையை செப்பனிட்டு தருவதாக கூறி உடனடியாக பாதை சரி செய்யப்பட்டு அந்த பாதை வழியாக சடலம் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Tags : protest ,Chettikulam ,road ,
× RELATED நெல்லுக்கு மாற்றாக சிறுதானிய பயிர்களை பயிரிடும் விவசாயிகள்