×

பைக் விபத்தில் வாலிபர் பலி

தா.பழூர், நவ. 8: தா.பழூர் அருகே பைக் விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் இறந்தார். மேலும் முதியவர் படுகாயமடைந்தார்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த கண்ணன் (65). இவர் கடந்த 5ம் தேதி ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதே திசையில் காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாஸ்கர் (20) என்பவர் ஓட்டி வந்த பைக், கண்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் கண்ணன், பாஸ்கர் ஆகியோர் காயமடைந்தனர்.இதையடுத்து 2 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மேல்சிகிச்சை–்ககாக பாஸ்கர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் இறந்தார். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை