×

பாமக நிறுவனர் மீது முகநூலில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், நவ. 8: ஜெயங்கொண்டம் அருகே முகநூல் மூலம் பாமக நிறுவனர் மீது அவதூறு பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணதிரையர் குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவச்சந்திரன் (23). இவர் தனது முகநூலில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீதும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் மீதும் அவதூறாக செய்தி பரப்பி ஒரே சமூகத்தினரிடையே கலவரத்தை உண்டு பண்ணும் வகையில் செய்துள்ளார் என்று மீன்சுருட்டி காவல் நிலையத்தில் பாமக ஒன்றிய செயலாளர் இறவாங்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பாமக மாநில துணை பொது செயலாளர் வைத்தி, மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி, சிறப்பு மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் மீன்சுருட்டி போலீசார் ஆலோசனை செய்தனர். பின்னர் அவதூறு பரப்பிய சிவச்சந்திரன், காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (17 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : face founder ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடி குறித்து...