×

மொபட் மீது கார் மோதி தச்சு தொழிலாளி பலி

ஜெயங்கொண்டம், நவ. 8: ஜெயங்கொண்டம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி பலியானார்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சாமிதுரை (46). தச்சு தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் உடையார்பாளையம்- ஜெயங்கொண்டம் சாலையில் குடிநீர் பிடிப்பதற்காக மொபட்டில் காலி குடங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமிதுரை பின்புறம் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த சாமிதுரையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சாமிதுரை சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து கார் ஓட்டி வந்த டிரைவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Carpenter ,car crashes ,
× RELATED மருத்துவ படிப்பிற்கு தேர்வான தறித்தொழிலாளி மகள் முதல்வரிடம் வாழ்த்து