×

பாடாலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

பாடாலூர், நவ. 8: பாடாலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரமுத்து (80). அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடியிருந்து வருகிறார். இவர் நேற்று காலை அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் எடுப்பதற்காக சென்றார். அப்போது அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து அவருடைய உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெரம்பலூர் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து வீரமுத்து உடலை மீட்டனர். பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீரமுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணைநடத்தி வருகின்றனர்.



Tags : Badalur ,
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது