×

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாடு பயிற்சி

வேதாரண்யம், நவ.8:நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியப் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஐந்து கட்டங்களாக நடைபெற்ற பயிற்சியில் தலைமைப் பண்பு, கற்பிக்கும் முறை, உடல்திறன், பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்வு காணுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்றிய ஆசிரிய பயிற்சி பள்ளி முதல்வர் முருகையன் மற்றும் பயிற்சியாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.


Tags :
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு