×

அம்மா இருசக்கர வாகனம் பயனாளிகள் தேர்வு 20ம்தேதி வரை நீட்டிப்பு

நாகை, நவ.8: அம்மா இரு சக்கர வாகனம் பயனாளிகள் தேர்வு வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிற்கான பயனாளிகளை தேர்வு செய்திட கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்று பரிசீலனை செய்து பயனாளிகள் தேர்வு செய்திட வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED 20 லட்சம் கோடி மட்டுமல்ல பொருளாதார...