×

தரங்கம்பாடி அருகே குடிசை வீடு தீக்கிரை

தரங்கம்பாடி, நவ.8: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள காட்டுச்சேரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் குடிசை வீடு எரிந்து 3 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளதுதரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி ஊராட்சி காராம்பள்ளம் கிராமம் மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் (67). நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்தது.அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த தரங்கம்பாடி தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.அதற்குள் வீட்டில் இருந்த பணம், நகை, டிவி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் ரேசன், ஆதார் கார்டு மற்றும் தனது மகள் வளைகாப்பிற்கு வாங்கி வைத்த சீர்வரிசை பொருட்களும், ரூ.15 ஆயிரம் பணமும் தீயில் எரிந்து நாசமானது. பொருட்களின் சேத மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Cottage house ,Tarangambadi ,
× RELATED குடிசை வீட்டில் தீ விபத்து