×

சீர்காழி நகராட்சிக்கு ஆணையர் இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

சீர்காழி, நவ.8: சீா்காழி நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் கடந்த அக்டோபா் மாதம் 10ம் தேதி தேவக்கோட்டைக்கு பணிமாறுதலாகி சென்றார். இதையடுதம்து நகராட்சி பொறியாளர் மெய்ப்பொருள், ஆணையா் பணியையும் கூடுதலாக கவனித்து வருகிறாா். ஆனால் நகராட்சி ஆணையருக்கான காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் அதிகாரபூா–்வமாக வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் தினந்தோறும் நடக்கும் முக்கியமான பணிகளுக்கு கூட பணம் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. கடந்த 25 நாட்களுக்கு மேலாக புதிய ஆணையரை நியமனம் செய்யாததால் நகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவே, சீா்காழி நகராட்சி பொறுப்பு ஆணையருக்கு உரிய அதிகாரத்தை வழங்க வேண்டும் அல்லது புதிய ஆணையரை உடனடியாக நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Tags : commissioner ,corporation ,
× RELATED மனநல பாதிப்புக்கு கவுன்சிலிங்...