×

பொதுத்தேர்வு மாணவர்களின் விபரங்களை உடனே அனுப்புங்கள்

திண்டுக்கல், நவ. 8: பொதுதேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ்1 வகுப்புக்கும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு 1200 மதிப்பெண்களில் இருந்து 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விவரங்கள் அனுப்ப ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பல பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் அனுப்பாமல் காலம்தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உடனடியாக அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவர்கள் விவரங்கள் ஏற்கனவே அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தங்கள் தேர்வு மையத்தில் மார்ச் 2020ம் ஆண்டு தேர்வு எழுதவுள்ள 10, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வறைகள் தொடர்பான விவரங்களை அதற்கான உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக துரிதமாக செயல்பட்டு விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் தேர்வு எழுதும் நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகளை ஒதுக்கீடு செய்வதற்காக பெறப்படுகிறது. இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...