×

புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட 782 வாகனங்களுக்கு ரூ.5.62லட்சம் அபராதம்

நாகை, நவ.8: புதுச்சேரி மாநில பதிவு எண்ணுடன் நாகையில் இயங்கிய வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து ரூ.5 லட்சத்து 62 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.தமிழகத்தில் நிரந்தர முகவரி கொண்டு வசிப்பவர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்து தமிழக சாலையில் நிரந்தரமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாக நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் நாகையில் பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தினர். இதில் நடப்பாண்டில் நடத்திய சோதனையில் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட 782 இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதன் மூலம் வரி உள்ளிட்ட கட்டணமாக ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 95 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்டு தமிழக எல்லையில் தொடர்ந்து இயக்கப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீதான சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.


Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரிக்குள் தமிழக வாகனங்களுக்கு...