×

300 பயனாளிகளுக்கு காய்கறி விதை விநியோகம்

தரங்கம்பாடி, நவ.8: நாகை மாவட்டம், பொறையாரில் தோட்டக்கலை சார்பில் 300 பயனாளிகளுக்கு இலவச காய்கறி விதைகள் விநியோகம் செய்யப்பட்டது.பொறையாரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சரின் கிராமப்புற வீட்டுக் காய்கறி உற்பத்தி திட்டத்தின்கீழ் வெண்டை, கொத்தவராங்காய் உள்ளிட்ட 7 விதமான காய்கறி விதைகள் அடங்கிய விதை பொட்டலம் மற்றும் ஒரு கிலோ மக்கிய தொழு உரம் காய்கறி வளர்ப்பு முறை குறித்து துண்டு பிரசுரம் ஆகியவை வழங்கப்பட்டன. இதை பொறையார், காட்டுச்சேரி, காளியப்பநல்லூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் 300 பயனாளிகள் பெற்றுக்கொண்டனர். மேலும் வீட்டு காய்கறி தோட்ட வளர்ப்பு முறைகள் இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி, செம்பனார்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி பேசினார். தரங்கம்பாடி பேருராட்சி செயலாளர் ரஞ்சித், பள்ளி முதல்வர் பாண்டியராஜன், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் செல்வம், மணிகண்டன் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுச்சேரியில் மின்விநியோகத்தை...